அரசியல் களத்தில் திடீர் திருப்பம்… தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி… வெளியானது அறிவிப்பு….!

By Nanthini on மாசி 10, 2026

Spread the love

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் நடத்தப்படும் தேர்தல், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு மாதம் முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே நடத்தி முடிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கேற்ப, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களின் ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலுக்கு இன்னும் வெறும் 65 நாட்களே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மார்ச் மாதத்தில் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, ஏப்ரல் மூன்றாவது வாரத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் தொகுதிப் பொறுப்பாளர்களிடம் களப்பணிகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளதால், தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

   

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் முன்பே தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கும் என கருதப்படுகிறது. மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது, தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை உறுதிப்படுத்துகிறது. அடுத்த இரண்டு மாதங்கள் தமிழக அரசியலில் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என்பதில் ஐயமில்லை.