கோயம்புத்தூரில் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து ஒன்றில், இளைஞர் ஒருவர் தனது காதலியை மடியில் அமரவைத்தபடி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. பேருந்தில் பிற பயணிகள் இருக்கும்போதே, பொதுவெளியில் நாகரிகம் கருதாமல் இருவரும் இவ்வாறு நடந்து கொண்டது சக பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தயவுசெய்து பொது இடங்களில் இந்த மாதிரி நடக்காதீங்க, #coimbatore #sulur #bus #lovers😡😡😡😡 pic.twitter.com/eDa1vaOg2M
— மறுபக்கம் 🙈 (@balup591517) February 9, 2026
இந்தக் காட்சியைப் பேருந்திலிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து இணையத்தில் பகிர, அது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசுப் பேருந்து போன்ற பொது இடங்களில் இத்தகைய அநாகரிகமான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இது போன்ற நிகழ்வுகள் மற்ற பயணிகளுக்கு, குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
