சீனாவில் ஒரு விவசாயி தனது பன்றியை ட்ரோன் மூலம் மலையிலிருந்து மலைக்கு நகர்த்த முயன்றபோது, அந்த ட்ரோன் மின் கம்பிகளில் சிக்கியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஜனவரி 24-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தால், கிராமம் முழுவதும் சுமார் 10 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.விவசாயி பன்றியை சுமந்து செல்ல ட்ரோனைப் பயன்படுத்தினார்.பன்றியை சுமந்து சென்ற ட்ரோன் எதிர்பாராதவிதமாக மின் கம்பிகளில் சிக்கிக் கொண்டது.
Epic blackout in China caused by a pig flying on a drone
A humorous incident occurred at the end of January. A farmer decided to use a drone to transport an animal across mountainous terrain, but the drone hit power lines.
As a result, the pig got stuck, and thousands of people… pic.twitter.com/ZOvl1mNreA
— NEXTA (@nexta_tv) February 6, 2026
இதனால் முழு கிராமமும் இருளில் மூழ்கியது. மின்சாரத்தை மீட்டெடுக்க 12 பேர் கொண்ட குழு தேவைப்பட்டது. பழுதுபார்க்க சுமார் 10,000 முதல் 1,30,000 யுவான் வரை செலவாகியுள்ளது. இதுபோன்ற பரிசோதனைகள் ஆபத்தானவை என்றும், ட்ரோன்கள் மின் கம்பிகளில் சிக்கிக் கொள்வதுடன், விலங்குகளின் எடையும் விபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
