“அவரு வாங்குன அதே மூச்சு.. அதானடா..” விஜய்யை காப்பி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்..? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, தனது பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். பாதுகாப்பு காரணங்கள் மற்றும் காவல்துறை விதிக்கும் 30 நாள் முன் அனுமதி போன்ற கடுமையான கட்டுப்பாடுகளால் அவர் நேரடி மக்களைச் சந்திப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் “விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்” என்ற விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகின்றன.

இந்தச் சூழலில், திமுக நடத்திய மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த ஒரு செயல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய் தனது மாநாட்டில் தொண்டர்களுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற ரேம்ப் (Red Carpet Ramp) பாதையில் நடந்து வந்து உற்சாகப்படுத்தியது போலவே, தற்போது முதலமைச்சரும் அதே பாணியில் நடந்து வந்து தொண்டர்களைச் சந்தித்துள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள், ‘சச்சின்’ திரைப்படத்தில் வரும் “அவரு வாங்குன அதே மூச்சு.. அதானடா..” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, முதலமைச்சர் விஜய்யின் பாணியைப் பின்பற்றுவதாகக் கிண்டல் செய்தும், வீடியோக்களைப் பகிர்ந்தும் வைரலாக்கி வருகின்றனர்.