BIG BREAKING: முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அண்ணாமலை அதிரடி…!!

By Soundarya on மாசி 8, 2026

Spread the love

தமிழகத்தில் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 (TNPSC Group 2) தேர்வு ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாத ஒரு கையாலாகாத நிலையில் இந்த அரசு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறைகேடுகளுக்கு திமுக அமைச்சர்களின் லஞ்சப் புகார்களே காரணமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு அரசுப் பணிகளை வழங்க முற்படுவதால் தான் இத்தகைய குளறுபடிகள் ஏற்படுகிறதா என வினவியுள்ள அண்ணாமலை, இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசுப் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.