“நானும் உன் வீட்டு வழியா தான் போறேன்”.. இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கராத்தே மாஸ்டர் செய்த கொடூரம்… அலறிய 10 ஆம் வகுப்பு மாணவி….!

By Nanthini on மாசி 8, 2026

Spread the love

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சிலம்பம் பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை கணேஷ் நகரைச் சேர்ந்த 40 வயதான திருநாவுக்கரசு என்பவர், ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் தற்காப்புக் கலை பயின்று வருகின்றனர்.

சம்பவத்தன்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஈஞ்சம்பாக்கம் விநாயகர் கோயிலில் திருநாவுக்கரசு தலைமையில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீடு திரும்பிய நிலையில், நீலாங்கரையைச் சேர்ந்த 15 வயதுடைய 10-ஆம் வகுப்பு மாணவி மட்டும் பேருந்துக்காகக் காத்திருந்தார். இதைக் கவனித்த பயிற்சியாளர் திருநாவுக்கரசு, “நானும் உன் வீட்டின் வழியாகத்தான் செல்கிறேன், உன்னை விட்டுவிடுகிறேன்” என்று கூறி, மாணவி மறுத்தபோதிலும் கட்டாயப்படுத்தித் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.

   

பயணத்தின்போது திருநாவுக்கரசு மாணவியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மாணவி அதிர்ச்சியடைந்து தட்டிக்கேட்டபோது, தெரியாமல் கை பட்டுவிட்டதாகக் கூறி மழுப்பியுள்ளார். தொடர்ந்து அவர் எல்லை மீறியதால் மாணவி சத்தமிட்டு தன்னை இறக்கிவிடுமாறு கோரியுள்ளார். ஆனால், வண்டியை நிறுத்தாத திருநாவுக்கரசு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி பயத்தில் கத்தி கூச்சலிடவே, அவரை பாதியிலேயே இறக்கிவிட்டு திருநாவுக்கரசு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

   

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீருடன் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த பயிற்சியாளர் திருநாவுக்கரசை விரைந்து கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்காப்புக் கலை கற்றுத் தரும் ஆசிரியரே மாணவிக்கு இழைத்த இந்த அநீதி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.