பீகார் மாநிலம் மோதிஹாரியைச் சேர்ந்த சௌரப் மிஸ்ரா, மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 2022-ல் திருமணம் நடந்த சில காலத்திலேயே தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகள், கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் குடும்பச் சூழல் சௌரப்பை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிய நிலையில், அவரது மனைவியின் தரப்பிலிருந்து வந்த கடுமையான வசவுச் சொற்கள் அவரை மேலும் நிலைகுலையச் செய்துள்ளன.
குறிப்பாக, “நீ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? போய் செத்துப்போ” மற்றும் “சல்பாஸ் மாத்திரைகளைச் சாப்பிட்டு உயிரிழந்துவிடு” போன்ற கொடூரமான வார்த்தைகள் சௌரப்பை ஆழமாகப் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர்ச்சியான மன ரீதியான சித்திரவதையைத் தாங்க முடியாமல், அவர் விபரீத முடிவை நோக்கித் தள்ளப்பட்டார். மனைவியின் தூண்டுதல் வார்த்தைகளே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
