தாலியின் ஈரம் கூட காயல..! திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்.. “உடலில் பல இடங்களில் காயம்” பெற்றோர்கள் பரபரப்பு புகார்..!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் அத்திவாக்கத்தில், திருமணமாகி வெறும் 5 மாதங்களே ஆன நிலையில் கௌசல்யா (20) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது கணவர் ராஜேஷ் (30) தெரிவித்துள்ளார். இருப்பினும், கௌசல்யாவின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால், இது தற்கொலையோ அல்லது விபத்தோ அல்ல, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கௌசல்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதால், ஆர்டிஓ (RDO) விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா அல்லது விபத்தா என்ற உண்மை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.