திரையுலகில் சோகம்..! ‘மேரி கோம்’ பட நடிகர் சுனில் தாபா மாரடைப்பால் காலமானார்..!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love

பாலிவுட் மற்றும் நேபாளத் திரையுலகின் மூத்த நடிகரான சுனில் தாபா (Sunil Thapa), இன்று (பிப். 07) மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 68. 1981-ல் கமல்ஹாசன் நடித்த ‘ஏக் தூஜே கே லியே’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ், ஹிந்தி மற்றும் நேபாள மொழி உட்பட நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் நடித்த ’10 எண்ணுறதுக்குள்ள’ படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது.

குறிப்பாக, பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரி கோம்’ திரைப்படத்தில் அவரது பயிற்சியாளராக (Coach) சுனில் தாபா ஏற்று நடித்த கதாபாத்திரம் உலக அளவில் அவருக்குப் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. நேபாளத் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞராகத் திகழ்ந்த இவரது மறைவு, இந்திய மற்றும் நேபாளத் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்குத் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.