செம ஷாக்கில் திமுக..! கொங்கு மண்டலத்தில் வலுக்கும் அதிமுக… மருதம் மக்கள் கழகத்தை தொடர்ந்து கொமுக-வும் ஆதரவு..!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தங்கவேலு தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அதிமுக கூட்டணிக்குத் தங்களது கட்சி முழு ஆதரவை அளிக்கும் என்று அவர் உறுதி அளித்தார். இந்த புதிய வரவை வரவேற்கும் விதமாக, தங்கவேலு மற்றும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், தற்போது கொங்கு நாடு முன்னேற்ற கழகமும் கைகோர்த்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க இக்கட்சிகளின் ஆதரவு, வரும் தேர்தல்களில் அதிமுகவின் பலத்தை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது