2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மத்ரே, முகமது கைஃப் (2000), விராட் கோலி (2008), உன்முக்த் சந்த் (2012), பிருத்வி ஷா (2018) மற்றும் யாஷ் துல் (2022) ஆகியோருக்குப் பிறகு கோப்பையை உயர்த்திய ஆறாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை இன்று (பிப்ரவரி 6, 2026) பெற்றுள்ளார்.இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது 6-வது உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. மகாராஷ்டிராவின் விராரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாட்டங்கள் வெடித்தன.
<
#WATCH | Virar, Maharashtra | India U19 wins the ICC Under 19 Cricket World Cup | Mother of Captain Ayush Mhatre, says, “I am very happy today that the world is seeing my son. He has the support and blessings of everyone. We are all very happy. Ayush has worked very hard since… pic.twitter.com/3cCwElhnYL
— ANI (@ANI) February 6, 2026
/div>
இந்நிலையில் ஆயுஷ் மைத்ரேயின் தாயார் கூறுகையில், “உலகம் இன்று என் மகனைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு அனைவரின் ஆதரவும் ஆசீர்வாதமும் உள்ளது. ஆயுஷ் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே மிகவும் கடினமாக உழைத்து வருகிறார், அதன் பலனை இன்று காண்கிறோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். தந்தை யோகேஷ் கமல்கர் மத்ரே கூறுகையில், “அவரது தலைமையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. என்னால் என் உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இன்று அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது ஒரு வாழ்நாள் சாதனை” என்று உணர்ச்சிவசப்பட்டார்.
