பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் 6 மாத காலக் கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அதிரடி அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, எந்தவொரு பெண்ணையும் அவரது விருப்பத்திற்கு மாறாகக் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒரு பெண்ணின் உடல் சார்ந்த உரிமைகளும், கண்ணியமான வாழ்வும் மிக முக்கியமானது என்பதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருக்கலைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவை விட, பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநலம் மற்றும் விருப்பத்திற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இக்கட்டான சூழலில் இருக்கும் பெண்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, தனிமனித சுதந்திரம் மற்றும் உடல் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
