குப்பை கொட்டுவதில் உச்சக்கட்ட சோம்பேறித்தனத்தைக் காட்டிய ஒரு பெண்ணின் செயல், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தனது வீட்டில் சேர்ந்த குப்பைகளை அகற்ற அந்தப் பெண் ‘ரேபிடோ’ (Rapido) சேவையைப் பயன்படுத்தியுள்ளார். வீட்டிற்கு வந்த ஓட்டுநரிடம் ஒரு பார்சலைக் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு டெலிவரி செய்யுமாறு கூறியுள்ளார். அந்த இடத்திற்குச் சென்ற ஓட்டுநர், அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.
குப்பை கொட்டுவதில் உச்சக்கட்ட சோம்பேறித்தனம்
குப்பை கொட்டுவதற்கு ரேபிடோ பயன்படுத்திய பெண்ணை நெட்டிசன்கள் வரிந்து கட்டி விமர்சிக்கின்றனர். பெண்ணின் வீட்டிற்கு சென்ற ரேபிடோ ஓட்டுநர் அவர் கொடுத்த பொருளை வாங்கிவிட்டு டெலிவரி லொகேஷனுக்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததால்… pic.twitter.com/T1DZAXvXbz
— 𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) February 6, 2026
