2026 டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக, இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த நிலையில், டிரஸ்ஸிங் அறையில் திலக் வர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்து 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசி அசத்திய திலக் வர்மா, போட்டிக்குப் பின் உணவு அருந்திக்கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
<
Arshdeep Singh making a reel after last night’s warm up match.
– Tilak Varma was seen furious as Arshdeep took the video without his consent. 👀pic.twitter.com/Vvh6tiQCh1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 5, 2026
/div>
வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நகைச்சுவைக்காக திலக் வர்மாவைத் தனது மொபைலில் வீடியோ எடுக்க முயன்றபோது, அதனால் அதிருப்தியடைந்த திலக் வர்மா பதிவை நிறுத்துமாறு கோபத்துடன் எச்சரித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வீரர்களுக்கு இடையே மோதல் நிலவுவதாக ஒரு தரப்பினரும், இது நண்பர்களுக்கு இடையேயான சாதாரண கேலிதான் என்று மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
