Actor Pradeep Ranganathan

எல்ஐகே படம் ரிலீஸ் ஆவது எப்போது? இப்போதைக்கு வாய்ப்பில்லே ராஜா – விரக்தியடைந்த பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள்!

By Elango on மாசி 5, 2026

Spread the love

நடிகர் பிரதீப் ரங்கநாதன் திரைப்பட இயக்குனராக கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து லவ்டுடே என்ற படத்தை அவரே இயக்கி நாயகனாகவும் நடித்தார். இதுவும் 100 கோடி ரூபாய் வசூலித்த சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அடுத்து அவர் நடித்த டிராகன் டியூட் படங்களும் வெற்றிப் படங்களாக இருந்தன.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் பல மாதங்களாக திரைக்கு வராமல் உள்ளது. கடந்த 2025ம் ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்ட இந்த படம் ஓராண்டாக வெளியாகவில்லை.

   

இப்போது வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு 12ம் தேதி எல்ஐகே படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் இன்னும் படத்தை சென்சார் போர்டுக்கே அனுப்பாமல் படக்குழு இருந்து வருகிறது. ஆனால் இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் சாட்டிலைட் வியாபாரம் நடக்காத நிலையில் படத்தை தணிக்கைக்கு அனுப்ப படக்குழு முன்வரவில்லை. அதனால் எல்ஐகே ரிலீஸ் இப்போதைக்கு வாய்ப்பில்ல ராஜா என்ற சூழலே நிலவுகிறது.