இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடித்த படம் கேம் சேஞ்சர். அந்த படத்தைக் தொடர்ந்து நடிகர் ராம்சரண் நடித்துள்ள புதிய படம் பெத்தி. இந்த படத்தை புச்சி பாபு டைரக்ட் செய்து இருக்கிறார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து பெத்தி படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார்.
பெத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சிகிரி பாடல் உள்ளிட்ட லிரிக்ஸ் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பெத்தி படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ஒரு மாதம் தள்ளி ஏப்ரல் 30ம் தேதி என புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
