அடுத்த டுவிஸ்ட்…. இனிமேல் விஜய் உடன்…. அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல் களம்….!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மற்றும் பாஜாக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான மோதல் தற்பொழுது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, இதுவரை விஜய்யை நேரடியாக விமர்சிக்காமல் இருந்த நிலையில், இனிமேல் அவருடன் நேரடி அரசியல் மோதல் இருக்கும் என அதிரடியாக அறிவித்துள்ளார். “தவெகவில் இருப்பவர்கள் எல்லாம் பல கட்சிகள் மாறி வந்தவர்கள்; அங்கிருக்கும் ‘அல்லுசில்லுகளுக்கெல்லாம்’ பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என காட்டமாகத் தெரிவித்த அவர், விஜய்யின் கட்சியை ஒரு ‘ஓட்டை இன்ஜின்’ என்றும் கடுமையாக சாடினார்.

அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு தவெக தரப்பிலிருந்து எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, தவெகவின் முக்கிய நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல்குமார், அண்ணாமலையின் பேச்சை ஒரு பொருட்டாகக் கருதத் தேவையில்லை என்றும், அவர் நாள்தோறும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஏதோ ஒரு கருத்தைப் பேசும் நபர் என்றும் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தின் இரு முக்கிய ஆளுமைகளுக்கிடையே தொடங்கியுள்ள இந்த நேரடி மோதல், வரும் காலங்களில் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.