குஷியோ குஷி..! குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்… வெளியானது சூப்பர் குட் நியூஸ்..!!

By Soundarya on மாசி 4, 2026

Spread the love
டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக டெல்லி அரசு முதற்கட்டமாக ரூ. 242 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேசிய முதலமைச்சர் ரேகா குப்தா, தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் சிலிண்டருக்கான தொகையான ரூ. 853 நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் ஏழை எளிய மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வரவுள்ள ஹோலி பண்டிகையை முன்னிட்டு, முதல் தவணைத் தொகை பயனாளிகளின் கணக்கிற்குச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.