தமிழக அரசியலில் பரபரப்பு..! “விஜய் ஒரு கோழை” குப்பைத்தொட்டியுடன் ஒப்பிட்டு விஜய்யை சாடிய எஸ்.வி.சேகர்..!!

By Soundarya on மாசி 4, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும்தான் நேரடிப் போட்டி என்று அறிவித்திருந்தார். விஜய்யின் இந்த அரசியல் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யை ஒரு “கோழை” என்று விமர்சித்த அவர், வீட்டுக்கு ஒரு ஓட்டு என்ற விஜய்யின் கருத்தை எள்ளி நகையாடும் விதமாக, “அது எப்படி வீட்டுக்கு ஒரு ஓட்டு இருக்கும்? வீட்டுக்கு ஒரு குப்பைத் தொட்டிதான் இருக்கும்” என்று காரசாரமாகப் பதிலளித்துள்ளார்

விஜய்யின் அரசியல் பக்குவமற்ற தன்மையையே இது காட்டுவதாகவும், சினிமாவில் வசனம் பேசுவது போல் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும் அவர் சாடியுள்ளார். அரசியல் என்பது 24 மணி நேர சேவை என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இப்போதைக்கு அவர் கேரவனில் இருந்து இறங்கி மக்களுடன் நேரடியாகப் பழக வேண்டும் என்றும் எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் செயல்பாடுகள் ஒரு “சுய விளம்பரம்” போலவே தெரிவதாகவும், 2026 தேர்தல் அவருக்கு அரசியலின் எதார்த்தத்தைப் புரிய வைக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.