actor Dhanush

ராஜ்குமார் பெரியசாமி டைரக்‌ஷனில் நடிகர் தனுஷ் நடிக்கும் டி55 படத்தில் 2 நாயகிகள் ஜோடி… இன்னும் ஒரு சூப்பர் அப்டேட்டும் இருக்குது…

By Elango on மாசி 3, 2026

Spread the love

இட்லி கடை படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் தனது 55 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீலீலா நாயகி என முதலில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இப்போது நடிகை சாய்பல்லவியும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கிறார் என்ற தகவலையும் படக்குழு உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திலும் சாய்பல்லவி தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. டி 55 படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் படித்த தனுஷ், இயக்குனரை பாராட்டியிருக்கிறார். மேலும் இந்த படம் 90 சதவீதம் சென்னையில் தான் படமாக்கப்பட உள்ளது. மீதி 10 சதவீதம் மட்டுமே வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.