“முகம் சிதைக்கப்பட்டு நிர்வாணமாக கிடந்த உடல்” லிவ்-இன் காதலிக்கு தெரிந்த ரகசியம்… மனைவியோடு சேர்ந்து காதலன் செய்த கொடூரம்… மும்பையை நடுங்கவைத்த சம்பவம்..!!

By Soundarya on மாசி 3, 2026

Spread the love

மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விஜய் குமார் சாஹ்னி என்பவர், 2012-ம் ஆண்டு முதல் பிரியா ஷெட்டி (35) என்ற பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், விஜய் தனது முதல் திருமணத்தை மறைத்து 2014-ம் ஆண்டு சந்தியா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பிரியா, தன்னை முறைப்படி திருமணம் செய்துகொண்டு தனது சொந்த ஊரான கோரக்பூருக்கு அழைத்துச் செல்லுமாறு விஜய்க்கு அழுத்தம் கொடுத்துள்ளார்

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 26-ம் தேதி விஜய் தனது மனைவி சந்தியா மற்றும் பிரியா ஆகிய இருவரையும் மும்பையிலிருந்து கோரக்பூருக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு ஜனவரி 29-ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த பிரியாவை விஜய்யும் அவரது மனைவி சந்தியாவும் இணைந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

   

அடையாளம் தெரியாமல் இருக்க பிரியாவின் முகத்தைச் சிதைத்து, உடலை நிர்வாணமாக்கி பிபி கஞ்ச் அருகே உள்ள பாலத்தின் அடியில் வீசியுள்ளனர். கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில், கோரக்பூர் போலீசார் விஜய், அவரது மனைவி சந்தியா மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த விஜய்யின் மாமனார் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.