“ஓபிஎஸ்-ன் வலது கை காலி”… சொந்தத் தொகுதியிலேயே இபிஎஸ் வீசிய ‘மெகா’ வலை…. 400 பேருடன் தாவிய முக்கிய புள்ளி….!

By Nanthini on மாசி 2, 2026

Spread the love

ஓபிஎஸ்-ன் கோட்டையாகக் கருதப்படும் போடிநாயக்கனூர் தொகுதியிலேயே அவருக்குப் மிகப்பெரிய அரசியல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக ஓ. பன்னீர்செல்வத்தின் நிழலாகவும், அவரது தீவிர விசுவாசியாகவும் அறியப்பட்ட திருப்பதி, தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்துள்ளார். ஓபிஎஸ் மேற்கொள்ளும் ஒவ்வொரு சுற்றுப்பயணம் மற்றும் மக்கள் சந்திப்புகளிலும் தவறாமல் இடம்பெறும் திருப்பதி, சமீபத்தில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கூட பங்கேற்றிருந்தார். இத்தகைய சூழலில், அவரது இந்த திடீர் கட்சித் தாவல் ஓபிஎஸ் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், திருப்பதி தலைமையில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். போடி தொகுதியில் ஓபிஎஸ்-க்கு இருந்த செல்வாக்கைச் சிதைக்கும் நோக்கில் ஈபிஎஸ் தரப்பு காய் நகர்த்தி வருவதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. தனது சொந்தத் தொகுதியிலேயே முக்கிய ஆதரவாளர்களைத் தக்கவைக்க முடியாமல் ஓபிஎஸ் திணறி வருவது, தமிழக அரசியலில் குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுகவின் பலப்பரீட்சையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.