அய்யயோ தப்பு பண்ணிட்டேன்..! முள்ளம்பன்றியை வேட்டையாட நினைத்த முதலை… அடுத்து நடந்த அதிர்ச்சியால் அலறியடித்து ஓடிய தருணம்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love

முள்ளம்பன்றியை முதலை வேட்டையாடும் அல்லது கடிக்க முயற்சிக்கும் அரிய காட்சிகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ற்றின் ஓரத்தில் இருக்கும் முள்ளம்பன்றியை ஒரு முதலை கடிக்க முயற்சிக்கும் வீடியோ  அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதில் முள்ளம்பன்றி தனது கூர்மையான முட்களை சிலிர்த்து முதலையைத் தாக்குவதைக் காணலாம்.

முள்ளம்பன்றியை வாயால் கவ்விய முதலையின் வாய் மற்றும் மென்மையான திசுக்களில் முட்கள் குத்தி விடுவதால், அந்த வலியால் முதலை அலறியடித்து உடனடியாக பின்வாங்கி விடுகிறது. அரிதான சில சமயங்களில், பெரிய முதலைகள் முள்ளம்பன்றியை முழுவதுமாக வேட்டையாடி விழுங்குகின்றன. முதலையின் வயிற்றில் உள்ள வலிமையான அமிலங்கள் முட்களைக் கூட கரைக்கும் திறன் கொண்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்