Breaking: திமுக மூத்த தலைவர் அதிமுகவில் இணைந்தார்… ஸ்டாலின் தலையில் விழுந்த பேரிடி..!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love

டெல்டா மாவட்டங்களில் திமுகவின் முகமாக அறியப்பட்ட முக்கிய இஸ்லாமியத் தலைவர்களில் ஒருவரான ஜி.எஸ்.பி. அலிசாஹிப், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த இவர், மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, ஹனிபாவுடன் இணைந்து சிறை சென்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

சிறுபான்மை மக்களின் வலிமையான குரலாகத் திகழும் அலிசாஹிப்பின் இந்தத் திடீர் முடிவு, நாகை மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தல்களில் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. திமுகவில் நீண்ட காலம் பயணித்த ஒரு மூத்த தலைவர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளது, டெல்டா மாவட்ட அரசியலில் அதிமுகவிற்குப் பெரும் பலமாகும்.