மூடிட்டு போ..! “இது உங்க அப்பன் வீட்டு ரயிலா..?” AC கோச்சில் சிகரெட் குடித்த இளம்பெண்… தட்டிக்கேட்ட சக பயணியை திட்டித்தீர்த்த பெண்ணுக்கு குவியும் கண்டனம்..!!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love

ரயில் ஏசி பெட்டியில் தடையை மீறி சிகரெட் பிடித்த இளம்பெண், அதைத் தட்டிக்கேட்ட சக பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் அமர்ந்து கொண்டு அந்தப் பெண் புகைபிடித்த நிலையில், புகையினால் மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த முதியவர் ஒருவர் கண்டித்தபோது, அந்தப் பெண் அவருக்கு மரியாதை கொடுக்காமல் தர்க்கம் செய்துள்ளார்.  அதாவது வாயை மூடு இது என்ன உங்க அப்பன் வீட்டு ரயிலா..? நீ ரூல்ஸ் போடுற என்று சண்டையிட்டுள்ளார் அந்த பெண்.

ரயில்களில் புகைபிடிக்கக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்து அபாயத்தையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் நடந்துகொண்ட விதம் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளனர். ரயில்வே சட்டம் பிரிவு 167-ன் படி ரயிலில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்தச் சம்பவம் குறித்துப் பதிவிடப்பட்ட வீடியோக்களில், சக பயணிகள் அந்தப் பெண்ணின் அநாகரீகமான நடத்தையைக் கண்டித்துள்ளனர். இதுபோன்ற சட்டமீறல்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.