திமுக தலைவர்களைக் குறிவைத்து இந்த மாதத்தில் மட்டும் இரண்டு அல்லது மூன்று முறை வருமான வரித்துறை அல்லது அமலாக்கத்துறை சோதனைகள் (Raids) நடத்தப்பட வாய்ப்புள்ளதாக ஆ.ராசா ஆருடம் தெரிவித்துள்ளார். பாஜக அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இத்தகைய சோதனைகளுக்கு திமுக அஞ்சாது என்றும், இந்த மிரட்டல்களால் அமித்ஷாவும் மோடியும் விரைவில் அரசியலில் இருந்தே காணாமல் போவார்கள் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட அவர், அந்த வெற்றி தேசிய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். 2027-ல் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்றும், அப்போது அமையவுள்ள புதிய மத்திய ஆட்சியில் திமுக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். கடந்த ஜனவரி 31-ம் தேதி பெரம்பலூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் மற்றும் கி.வீரமணி ஆகியோரை “எல்லைச் சாமிகள்” எனக் குறிப்பிட்டு, அவர்கள் இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது என்றும் பேசினார்.
