Director Abishek Jivind

நான் ஹீரோவாக நடிக்க ரஜினிதான் காரணம்… பிரபல இயக்குனர் சொன்ன சீக்ரெட்!

By Elango on மாசி 2, 2026

Spread the love

கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இப்போது வித்லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். வருகிற 6ம் தேதி வித் லவ் படம் ரிலீஸ் ஆகிறது. இதுகுறித்து அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது, முதலில் நான் வித்லவ் படத்தில் நடிக்க ஓகே சொன்னேன். அதற்குப் பிறகு வந்த விமர்சனங்கள் கடுமையாக என்னை பாதித்தது.

பிறகு ரஜினி சாரை சந்தித்தபோது நீ நடி கண்ணா என்று என்னை அவர் உற்சாகப்படுத்தினார். அந்த வார்த்தைதான் எனது இன்செக்யூரிட்டியை உடைத்தது. டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரிலீசான பிறகு எனக்கான மரியாதை கிடைத்தது.

   

இதற்கு முன்பு நான் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வேன். இப்போது அதே மெட்ரோ ரயில் பெட்டிகளில் எனது முகம் விளம்பரங்களில் இருக்கிறது. நான் என்ன தவறு செய்தாலும் நான் செய்த சில பாவங்களின் பிரதிபலிப்புதான். எனக்கு என்ன நல்லது நடந்தாலும் அதற்கு ஒரே காரணம் என் காதல் மனைவி அகிலாதான் என்று அபிஷன் ஜீவிந்த் கூறியிருக்கிறார்.