“நாங்க விளையாட மாட்டோம்”…. இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் எடுத்த விபரீத முடிவு… ஐசிசி கொடுத்த மரண அடி…!

By Nanthini on மாசி 2, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி அந்த அணி தொடரிலிருந்து விலகிய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவுக்கு வங்கதேச விவகாரமே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழலைக் காரணம் காட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், டி20 உலகக்கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியது. ஆனால், ஐசிசி இதற்கு மறுப்பு தெரிவித்ததால் வங்கதேசம் தொடரிலிருந்து விலகியது. தற்போது வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மறுப்பது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த விவகாரத்தில் ஐசிசி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது உலகக்கோப்பை தொடரின் மிக முக்கியமான வருவாய் ஆதாரம் என்பதால், அதை ஒரு நாடு தன்னிச்சையாகப் புறக்கணிப்பதை ஐசிசி ஏற்க வாய்ப்பில்லை. இதன் விளைவாக, பாகிஸ்தான் அணி தொடரிலிருந்தே நீக்கப்படலாம் அல்லது அந்த அணிக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 300 கோடி ரூபாய் வருவாயை ஐசிசி நிறுத்தி வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

   

பாகிஸ்தான் விளையாட மறுக்கும் பட்சத்தில், இந்தியாவுக்கு முழு வெற்றிப் புள்ளிகள் வழங்கப்படும். மேலும், ஐசிசி உடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான சட்டச் சிக்கல்களையும் சர்வதேசத் தடைகளையும் சந்திக்க நேரிடும். அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் புறக்கணிக்கும் பாகிஸ்தானின் இந்த முடிவு, அந்த நாட்டு கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கே பெரும் சவாலாக அமையும் என விளையாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர்.