நடிகர் சூர்யா தமிழில் நடிப்பது மட்டுமின்றி இந்தியிலும் நடிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். கடந்த 2024ம் ஆண்டில் இந்தி பட இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா என்ற படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க கமிட் செய்யப்பட்டார். இந்த படத்தில் கதாநாயகியாக ஜானகி கபூர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பிறகு சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது.
சமீபத்தில் இதுகுறித்து பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, கர்ணா படத்திற்காக 6 ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டேன். 2 பாகங்களாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். திரைக்கதை எழுதும் பணி முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் சில காரணங்களால் இந்த படத்தை தள்ளி வைக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் கர்ணா படத்தை கைவிடவில்லை. இந்த படத்துக்காக ஏற்கனவே ஏஆர் ரகுமான் 6 பாடல்களை இசையமைத்து வைத்துள்ளார் என்று இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் உறுதியாக கூறியிருக்கிறார்.
