திமுக, தவெகவுக்கு ஆப்பு..! ஒரே நாளில் மொத்தமாக அதிமுகவில் ஐக்கியமாகினர்… பெரும் பரபரப்பு…!

By Soundarya on மாசி 1, 2026

Spread the love

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 26 மற்றும் 27 ஆகிய பகுதிகளில் இருந்து திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அனீஷ் மற்றும் மைக்கல்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா, மயிலாடுதுறை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் எஸ். பவுன்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதிய உறுப்பினர்களுக்குக் கட்சித் துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பல்வேறு கட்சிகளிலிருந்து இளைஞர்கள் அதிமுகவில்  இணைந்து வருவது, அக்கட்சியின் களப்பணியை மேலும் வலுப்படுத்தும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.