டிகிரி முடித்தவர்களுக்கு லக்கி சான்ஸ்… SBI வங்கியில் 2,273 பணியிடங்கள்… உடனே Apply பண்ணுங்க…!

By Nanthini on மாசி 1, 2026

Spread the love

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான வட்டார அளவிலான அதிகாரிகள் (Circle Based Officer – CBO) பணிக்கு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2273 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வுக்கு, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் அல்லது பிராந்திய ஊரக வங்கிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.48,480 வழங்கப்படும், இதனுடன் இதர படிகளும் சேர்த்து மாதச் சம்பளம் சுமார் ரூ.52,000-க்கும் அதிகமாக இருக்கும்.

இந்தப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in மூலம் வரும் பிப்ரவரி 18, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு செயல்முறை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறும். தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருப்பது அவசியமான தகுதியாகும். பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் ஏதுமில்லை. வங்கித்துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த அரசு வேலை வாய்ப்பாக அமையும்.