சூப்பர் ஸ்டார்கள் வருவாங்க போவாங்க… ஆனா விஜய்யை NDA கூட்டணிக்கு இழுக்க.. ஒரே போடாக போட்ட பியூஷ் கோயல்…!!

By Soundarya on தை 31, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கடினமான காரியம் அல்ல என்று குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் தேர்தலில் கட்சி தனித்துவமான செல்வாக்குடன் விளங்குவதாகக் கூறினார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அரசியல் களத்திற்கு வரும் நடிகர்கள் குறித்துப் பேசிய அவர், “சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால் அவர்களால் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது” என்று விமர்சித்தார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், வளர்ச்சி அரசியலை முன்னிறுத்தி பாஜக தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.