“அறியா பருவம்.. ஆபத்தான காதல்”… வாலிபருடன் உல்லாசமாக இருந்த 11ஆம் வகுப்பு மாணவி…. இறுதியில் துடிதுடிக்க உயிரிழந்த சோகம்…..!

By Nanthini on தை 31, 2026

Spread the love

செங்கல்பட்டில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பமான நிலையில், முறையற்ற கருக்கலைப்பு முயற்சியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 11-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார். அந்த வாலிபரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த மாணவி, திருமணத்திற்கு முன்பே அவருடன் நெருங்கி பழகியதால் 10 வார கர்ப்பமடைந்துள்ளார். மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் அவர் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்குத் தெரியவந்தது.

இந்தத் தகவல் வெளியே தெரிந்தால் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கும் என்று அஞ்சிய உறவினர்கள், முறையான மருத்துவ ஆலோசனை இன்றி வீட்டிலேயே வைத்து கருவைக் கலைக்க முயன்றுள்ளனர். இதனால் மாணவிக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சுமார் 12 நாட்கள் உயிருக்குப் போராடிய மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

   

இந்தச் சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கர்ப்பமான தகவலை ஆரம்பத்திலேயே காவல்துறையிடம் தெரிவிக்கத் தவறிய தனியார் மருத்துவமனை மற்றும் கருக்கலைப்புக்கு முயன்ற உறவினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் அடையாளம் கண்டுள்ள நிலையில், அவரை கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அறியா பருவத்தில் ஏற்பட்ட காதலால் ஒரு இளம் உயிர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.