“தெருவெல்லாம் ஒரே நிர்வாண புகைப்படம்” ஜாதக பொருத்தம் இல்லாததால் நின்ற திருமணம்… பெண்ணை பழிவாங்க இன்ஜினீயர் செய்த அசிங்கம்…!!

By Soundarya on தை 31, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், திருமணத் தடை காரணமாகப் பெண்ணைப் பழிவாங்க அவரது அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்ட மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வ இந்தூர் குற்றப்பிரிவு போலீசார், ஆயுஷ் அக்னிஹோத்ரி என்ற தரவு ஆய்வாளரை (Data Analyst) ஒரு இளம் பெண்ணை மனரீதியாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகக் கைது செய்துள்ளனர். திருமணத் தகவல் மையத்தின் மூலம் அறிமுகமான அந்தப் பெண்ணுடன் ஜாதகப் பொருத்தம் இல்லாததால் திருமணம் தடைபட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆயுஷ், அந்தப் பெண்ணின் உருவத்தை ஆபாசமாகச் சித்தரித்து பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

இஅந்தப் பெண்ணைப் பழிவாங்க முடிவு செய்தார். ஜூலை 2025 முதல் ஜனவரி 2026 வரை, அந்தப் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரது உறவினர்களுக்கு ஏழு முறை அனுப்பியுள்ளார். மேலும், அந்தப் புகைப்படங்களை அக்கம் பக்கத்தில் வெளியிட்டு அவரது சமூகப் பிம்பத்தைக் கெடுக்க முயன்றுள்ளார். தனது அடையாளத்தை மறைக்க, உஜ்ஜைன், தேவாஸ், கட்டேகான், அஷ்டா மற்றும் தார் ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களிலிருந்து கடிதங்களை அனுப்பியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.