38 வயதான நோவக் ஜோகோவிச், 2026 ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னரை சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 3-6, 6-3, 4-6, 6-4, 6-4 என்ற கணக்கில் கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றியை வசப்படுத்திய அவர், ஓபன் சகாப்தத்தில் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 2024 விம்பிள்டன் போட்டிக்குப் பிறகு அவர் பெற்ற முதல் அரையிறுதி வெற்றி இதுவாகும்.
En tagen Novak Djokovic har svårt att hitta orden efter semifinalsegern mot Jannik Sinner.
📲 Streama Australian Open på HBO Max pic.twitter.com/9WOt9joXwl
— Sports on HBO Max 🇸🇪 (@sportshbomaxse) January 30, 2026
சுமார் 2 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லாத நிலையில், தனது 25-வது பட்டத்தை வென்று உலக சாதனை படைக்கும் இலக்கோடு அவர் களம் காண்கிறார். போட்டிக்குப் பின் ரசிகர்களின் ‘நோலே, நோலே’ என்ற கோஷங்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்கப் பேசிய ஜோகோவிச், “சொல்ல வார்த்தைகள் இன்றி திணறுகிறேன், உங்கள் அன்பிற்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி” என உருக்கமாகத் தெரிவித்தார். சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கும் அவர், இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸை எதிர்கொள்ளவுள்ளார்.
