“உன் அழகில் மயங்கிட்டேன், கணவருக்கு மந்திரி பதவி”…. வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்த அதிரடி லீலை…..!

By Nanthini on தை 31, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அமைச்சரவை சகாவான உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் டக் பர்கமின் மனைவி கேத்தரின் பர்கமைப் பார்த்து, “உங்கள் அழகின் காரணமாகவே உங்கள் கணவருக்கு நான் வேலை கொடுத்தேன்” என்று கூறியிருப்பது தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, கேத்தரின் பர்கமை மேடைக்கு அழைத்த டிரம்ப், அவர் பேசிக் கொண்டிருந்த ஐந்து நிமிடங்களும் அவரை அணைத்தபடி நின்றிருந்ததுடன், கேத்தரின் குதிரை சவாரி செய்யும் வீடியோவை பார்த்த பிறகே அவரைப் பற்றித் தெரிந்து கொண்டதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

உன் அழகில் மயங்கியே உன் கணவருக்கு வேலை கொடுத்தேன்..! அதிகாரியின் மனைவி மீது  ஆசைப்பட்ட டிரம்ப் வீடியோ.! | Donald Trump Flirt Us Secretary Of Interior  Doug Burgum Wife ...

   

டிரம்பின் இந்த பேச்சும், அவர் கேத்தரினை அணுகிய விதமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. ஒரு நாட்டின் பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர், பொதுவெளியில் ஒரு பெண்ணின் அழகைப் புகழ்ந்து பேசி, அதன் அடிப்படையில் தான் அவரது கணவருக்குப் பதவி வழங்கப்பட்டது எனக் கூறுவது முதிர்ச்சியற்ற செயல் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, டக் பர்கம் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பின்னால் அவரது தகுதியை விட அவரது மனைவியின் அழகுதான் காரணமாக இருந்ததா? என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.

   

டொனால்ட் டிரம்ப் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் தனது பத்திரிகை செயலாளர் கரோலினா லெவிட் குறித்துப் பேசும்போதும் இதே போன்ற சில கருத்துகளைத் தெரிவித்துச் சர்ச்சையில் சிக்கினார். தற்போது டக் பர்கம் மற்றும் அவரது மனைவி கேத்தரின் முன்னிலையிலேயே டிரம்ப் இப்படிப் பேசியிருப்பது அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 69 வயதான டக் பர்கம் வட டகோட்டாவின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் என்பதும், டிரம்பின் நீண்ட கால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.