குஷியோ குஷி..! இவர்களுக்கு பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு… தமிழக அரசு அதிரடி அரசாணை…!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

தமிழக அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது எந்தெந்தப் பதவிகளுக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தும் என்ற விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பார்வையற்றவர்கள், குறைந்த பார்வைத் திறன் கொண்டவர்கள் மற்றும் செவித்திறன் பாதிப்பு உள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தகுந்த பணியிடங்களை அடையாளம் கண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி, தலைமைச் செயலகத்தில் உள்ள சார்பு செயலாளர், பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 13 வகையான முக்கியப் பணியிடங்களில் பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அவர்கள் நிர்வாகத்தின் உயர் பதவிகளுக்குச் செல்வதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மாற்றுத்திறனாளி நலச் சங்கங்கள் வரவேற்றுள்ளன.