உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால், தங்கம் விலை கற்பனை செய்ய முடியாத உச்சத்தை நோக்கிப் பாய்ந்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 1,34,400-க்கு விற்பனையாவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 16,800-ஐத் தொட்டுள்ள நிலையில், இது முதலீட்டாளர்களுக்கு லாபமாகவும், நகை வாங்குவோருக்குப் பெரும் சுமையாகவும் மாறியுள்ளது.
இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன், “இன்னும் போகப் போக நிலைமை மோசமாகும்” என்று எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தைச் சேமித்து வருவது போன்றவை இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
