விளையாட்டு வீரர்களுக்கு ஜாக்பாட்…!! சர்வதேச தரத்தில் ஜொலிக்க போகும் கோவை… மெகா பிளான் இதோ…!!

By Devi Ramu on தை 28, 2026

Spread the love

சென்னை மாநகரைச் சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மையமாக மாற்றும் நோக்கில், தமிழக அரசு கோயம்புத்தூரில் பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கோவை ஜீவாநகரில் 1.10 ஏக்கர் பரப்பளவில் சுமார் 9.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்காகப் பிரத்யேக ‘பாரா ஒலிம்பிக்’ விளையாட்டு வளாகம் அமைய உள்ளது.

இதில் நவீன உடற்பயிற்சிக் கூடம், யோகா மையம் மற்றும் முதலுதவி சிகிச்சை வசதிகள் உலகத்தரம் வாய்ந்த முறையில் உருவாக்கப்பட உள்ளன. மேலும், கோவை – எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்திற்கு இணையாகச் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

   

இவை தவிர, கோவை நேரு மைதானத்தில் ஹாக்கி வீரர்களுக்காக நவீன ‘சிந்தெடிக் டர்ஃப்’ மைதானம் அமைக்கப்பட்டுள்ளதோடு, கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டுகளுக்காகப் பிரத்யேக உள்விளையாட்டு அரங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. பாரா ஒலிம்பிக் வளாகத்தில் டேபிள் டென்னிஸ், சக்கர நாற்காலி கூடைப்பந்து போன்ற உள்விளையாட்டுகளுடன் ஈட்டி எறிதல் போன்ற வெளிப்புற விளையாட்டுகளுக்கும் போதிய வசதிகள் செய்யப்பட உள்ளன.

   

விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களைத் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயார்படுத்துவதே இந்த முன்னெடுப்புகளின் முக்கிய நோக்கமாகும். இந்த நவீன வசதிகள் கோவை மாவட்ட இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.