திமுக+ தவெக+ டிடிவி என மூன்று பக்கமும் தூது… கட்சிதமாக காய் நகர்த்தி ஓபிஎஸ் போடும் பக்கா பிளான்… பரபரக்கும் 2026 தேர்தல் களம்..!!

By Soundarya on தை 28, 2026

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தனது ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றுவிட்ட நிலையில், ஓ. பன்னீர்செல்வம் (OPS) தற்போது தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள மூன்று வெவ்வேறு திசைகளில் ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தரப்பிடம் தான் பரிந்துரைக்கும் 5 முக்கிய ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மறுபுறம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தனக்கு கட்சிக் பதவியையும் தாண்டி ஒரு கௌரவமான இடமும், முக்கியத்துவமும் வேண்டும் என்று பேச்சு நடத்தி வருகிறாராம். இதுமட்டுமின்றி, பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருக்கும் டிடிவி தினகரனிடம், தனது தரப்பு வேட்பாளர்கள் 3 பேருக்கு மட்டும் வாய்ப்பு அளித்தால், தாங்கள் அமமுகவின் ‘குக்கர்’ சின்னத்திலேயே போட்டியிடத் தயார் என்றும் தூது அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஓபிஎஸ்ஸின் இந்த ‘மல்டி ரூட்’ அரசியல் வியூகம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.