பெங்களூரு வீதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதோடு மட்டுமல்லாமல், “என் பைக், என் விதிகள், என் சாலை” என ஆக்ரோஷமாகப் பேசிய பைக் ஓட்டுநரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிக்னலைத் தாண்டிச் சென்று ஒரு காரின் மீது மோதிய அந்த நபர், அதற்காக வருத்தம் தெரிவிக்காமல் கார் ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தனது அலைபேசியில் பதிவு செய்த கார் ஓட்டுநரை நோக்கி, “இது என் சாலை, என் விருப்பம்” என விரோதத்துடன் பதிலளித்த பைக் ஓட்டுநர், ஒருகட்டத்தில் அவரை அறையவும் முயன்றுள்ளார்.
On Republic Day our man jumped signal and almost collided with my car, when i shouted at him, he stopped and said “my bike, myrules, my road, my wish “ when i said please tell this to the cops he tried to slap me for recording #bangaloretraffic @blrcitytraffic @BlrCityPolice pic.twitter.com/lTTyPefeDR
— praveen mn (@mnpraveen1982) January 26, 2026
