செங்கோட்டையனின் அரசியல் சகாப்தம் முடிந்தது… அதிமுகவில் வெடித்த மோதல்.. ஏ.கே. செல்வராஜ் காட்டம்..!!

By Soundarya on தை 26, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ், கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கோட்டையனின் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்களுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

“நான் எத்தனையோ தலைவர்களைப் பார்த்துள்ளேன், ஆனால் விஜய் போல் ஒரு தலைவரைப் பார்த்ததில்லை” என செங்கோட்டையன் கூறியதைச் சுட்டிக்காட்டிய ஏ.கே. செல்வராஜ், “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை விட உங்கள் விஜய் பெரிய தலைவரா?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரே மற்றொரு மூத்த தலைவரை இவ்வாறு பகிரங்கமாகத் தாக்கிப் பேசியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.