EPS கோட்டையில் விழுந்த ஓட்டை… திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி… அதிர்ச்சியில் அதிமுகவினர்..!!

By Soundarya on தை 26, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அக்கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (2011-2016) மாதேஸ்வரன், அதிமுகவிலிருந்து விலகி நேற்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமமுக-வில் இணைந்து 2021 தேர்தலில் போட்டியிட்ட மாதேஸ்வரன், பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்திருந்தார். தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகக் கருதப்படும் சேலத்தில், முன்னாள் எம்எல்ஏ ஒருவரை திமுக தன் பக்கம் இழுத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.