நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேனாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவக்குமார் (45), நேற்று (ஜனவரி 25, 2026) தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
பலத்த காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை கோத்தகிரி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிவக்குமார் ஊட்டியில் தேயிலை எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
