BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தாா் விஜய்…. காலையிலேயே அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on தை 26, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. “நட்பு சக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும், தவெக தனித்து நின்று வெற்றிபெறும்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது, அவர் தனித்துப் போட்டியிடவே விரும்புகிறார் என்பதையே வெளிப்படுத்தியது. இருப்பினும், தற்போதுள்ள அரசியல் சூழலில் புதிய தமிழகம், தேமுதிக மற்றும் பாமக போன்ற கட்சிகள் விஜய் தரப்புடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக்கான கதவுகள் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை என்பதையே இந்தச் சந்திப்புகள் உணர்த்துகின்றன.

இருப்பினும், தொகுதிப் பங்கீடு மற்றும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஒருவேளை உடன்பாடு எட்டப்படாவிட்டால், விஜய்யின் முடிவு மிகவும் தெளிவாக இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேவையற்ற சமரசங்களைச் செய்து கொண்டு கட்சியின் கொள்கைகளை விட்டுக்கொடுக்க அவர் விரும்பவில்லை என்றும், சீட் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டால் தயங்காமல் தனித்துப் போட்டியிடலாம் என கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், வரும் தேர்தலை விஜய் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.