“குஷியோ குஷி”…. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி?… தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பம்….!

By Nanthini on தை 25, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புதான். கடந்த தேர்தல்களில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முறை கூட்டுறவு வங்கிகளில் 2 சவரன் வரையிலான நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்யும் புதிய வாக்குறுதியை இரு கட்சிகளுமே வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள தள்ளுபடித் திட்டங்களில் சில நிபந்தனைகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், வரவிருக்கும் தேர்தலில் “உடனடி தள்ளுபடி” அல்லது “குறைந்தபட்ச சவரன் தள்ளுபடி” போன்ற அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சிறு கடன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 2 சவரன் என்ற வரம்பு நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் இந்த அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி, தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமையும் என இல்லத்தரசிகளும் விவசாயிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.