FLASH NEWS: அதிமுகவில் அடுத்த விட்கெட் அவுட்…. திமுகவில் இணைந்த EX MLA …. செம ஷாக்கில் எடப்பாடி….!

By Nanthini on தை 25, 2026

Spread the love

அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படும் சேலம் மாவட்டத்தில், அக்கட்சிக்கு கடும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாதேஸ்வரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். ஆத்தூர் தொகுதியில் 2011 முதல் 2016 வரை அதிமுக சார்பில் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர் மாதேஸ்வரன். இவர் சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.ஆர். சிவலிங்கம் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். நீண்ட காலமாக அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த ஒரு மூத்த நிர்வாகி விலகியது, மாவட்ட அளவில் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது சொந்த ஊரிலேயே அதிமுகவின் வாக்கு வங்கியைத் தக்கவைக்கப் போராடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, இந்தத் திடீர் கட்சித் தாவல் பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு திமுக தனது பலத்தைப் பெருக்கி வரும் வேளையில், சேலம் போன்ற பலமான இடங்களில் அதிமுகவின் முக்கியத் தூண்கள் சரிவது அக்கட்சிக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மாதேஸ்வரன் போன்ற செல்வாக்குள்ள ஒரு முன்னாள் எம்.எல்.ஏ-வின் விலகல், சேலம் கிழக்கு மாவட்ட அதிமுகவில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது எடப்பாடி பழனிசாமிக்குச் சற்று கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.