தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கோரப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெறும் 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது பாஜக மேற்கொண்ட பல்வேறு அரசியல் நகர்வுகளால், டிடிவி தினகரனின் அமமுக மற்றும் சில முக்கிய சிறிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி உருவானது அதிமுக தலைமைக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
வலுவான கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது தனது பிடிவாதத்தை சற்றே தளர்த்திக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜகவின் ஒருங்கிணைப்புப் பணிகளால் உற்சாகமடைந்த அவர், அக்கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளார். இதன்படி, முன்பு 20 இடங்கள் என கறார் காட்டிய EPS, தற்போது சுமார் 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி மாற்றம் வரும் தேர்தலில் ஆளும் தரப்பிற்குப் பலத்த போட்டியை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
