சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது அரசு செய்துள்ள மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டார். அப்போது அவர், “திமுக ஆட்சியால் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் நேரடியாக உணர்ந்துள்ளனர். அதனால், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். என்னுடைய இலக்கை நான் எட்டிவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மக்களின் செல்வாக்கு திமுக பக்கமே இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டார். தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரின் இந்த ‘வெற்றி முழக்கம்’ ஆளுங்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
