“சின்னம் ஓகே… ஆனா ரூல்ஸ்”… தவெகவுக்கு விசில் கிடைத்தும் விஜய்க்கு புதிய சிக்கல்… ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்…!

By Nanthini on தை 22, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்குத் தேர்தல் ஆணையம் ‘விசில் ‘ சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள்ளாகவே புதிய சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளன. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான விவகாரங்களில் ஏற்கனவே சில அமைப்புகள் உரிமை கோரி வரும் சூழலில், தற்போது தேர்தல் விதிகளின்படி சின்னத்தைப் பயன்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் விஜய்க்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கட்சிப் பதிவில் உள்ள சில தொழில்நுட்பக் காரணங்களால், இந்தச் சின்னத்தை மாநிலம் முழுவதும் ஒரே சீராகக் கொண்டு செல்வதில் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அது தற்போது உலக அளவில் டிரெண்டாகியுள்ளது. இந்நிலையில் விசில், பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டாலும் தவெக போட்டியிடாத தொகுதிகளில் அது வேறு யாருக்கேனும் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தனித்து போட்டியிட்டால் 234 தொகுதியிலும் விசில் சின்னத்தை பெற முடியும். ஒருவேளை கூட்டணி கட்சிகள் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டால் அங்கு விசில் சுயேட்சைக்கு சென்றுவிடும்.